ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளரும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹந்தயா எனத் தன்னை அறிமுகப்படுத்திய ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் கூறியுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி, நண்பகல் அலுவலகத்தில் பொதுமக்கள் தினத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, அலுவலக கைப்பேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தவிசாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.
 
		
