தேயிலைக்கு அதிக விலையை செலுத்திய தெனியாய போ தொட்டுவ தேயிலை தொழிற்சாலை

0
154

குறித்த தேயிலை தொழிற்சாலை ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 211 ரூபாயை செலுத்தியுள்ளது. இம்மாதத்தில் தேயிலைக்கு அதிக விலை செலுத்திய தொழிற்சாலையாக தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் உள்ள தெனியாய போ தொட்டுவ தேயிலை தொழிற்சாலை பதிவாகியுள்ளது.

அதன்படி, குறித்த தேயிலை தொழிற்சாலை ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 211 ரூபாயை செலுத்தியுள்ளது. இரண்டாவது இடத்தை கேகாலை கொலன்ன தேயிலை தொழிற்சாலை பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 210.81 ரூபாயை செலுத்தியுள்ளது.

இதேவேளை, மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ள களுத்துறை மாவட்டத்தின் கலதர தேயிலை தொழிற்சாலை ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 202.19 ரூபாயை செலுத்தியுள்ளது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தின் விலை 10 ரூபாய் தொடக்கம் 20 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் தேயிலை விளையும் 11 மாவட்டங்களுள் 541 தேயிலை உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here