எமது நாட்டு தேயிலையின் தரத்தை உறுதி செய்வதற்கான விசேட விதிமுறைகளை பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிமுகப்படுத்தியுள்ளார்.
1957ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சில விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தேயிலை தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாக தேயிலையை வழங்கும் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும், பச்சை தேயிலை இலைகளின் உரிமம் பெற்ற விற்பனையாளர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.
ஒவ்வொரு உற்பத்தியாளரும், தேயிலை இலைகளின் உரிமம் பெற்ற ஒவ்வொரு வியாபாரிகளும் குறைந்தபட்சம் 60 சதவீதம் பச்சை தேயிலை இலைகளை கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
பச்சை தேயிலை இலைகளை சேதப்படுத்தாமல் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் கையாளுதல் உறுதி செய்யப்பட வேண்டும்.
உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் குறைந்தபட்சம் 60 சதவீதம் தரமான பச்சை தேயிலை கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை உற்பத்தியாளர் கட்டாயமாக்க வேண்டும்.
சேதமடையாத பச்சை தேயிலையை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதற்கான முறையான வழிமுறையை ஆரம்பிக்க வேண்டும் என விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.