தேயிலையுடன் லொறி குடைசாய்ந்து விபத்து – சாரதி பலத்த காயம்

0
179

தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கடியலென ஆற்று பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நேற்று (24.07.2022) இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக அந்த தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாவலப்பிட்டி கெட்டபுலா கடியலென தோட்டப் பகுதியில் இருந்து கெட்டபுலா தோட்டத்திற்கு தேயிலை கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி தேயிலை கொழுந்துடன் விபத்துக்குள்ளானதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னோக்கி சென்ற லொறியில் திடீரென தடுப்புக்கட்டை (பிரேக்) செயழிழந்ததன் காரணமாக பின்னோக்கி வந்து கொத்மலை நீர்தேகத்திற்கு நீர் வழங்கும் கடியலென ஆற்றுப்பகுதியில் இவ்வாறு குடைசாய்ந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட பொழுது சில தேயிலை கொழுந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மேலும் சில கொழுந்துகள் வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here