தேயிலை ஊடாக கம்பனிகள் பெறும் இலாபத்தின் பெரும் பகுதியை தொழிலாளர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வழியுறுத்தும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க இது தொடர்பாக சர்வதேச கம்பனிகளோடு உள்நாட்டு கம்பனிகளோடும் எதிர்காலத்தில் கலந்தாலோசிக்க உள்ளோம் என தெரிவித்தார்.இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி புரம் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
இந்த நாட்டில் 150 வருட மேலாக தேயிலைக்கு உரம் கொடுத்து வாழும் தோட்ட தொழிலாளர்களை முன்னேற்றவும், தேயிலை தொழிலை முன்னேற்றவும் எதிர்காலத்தில் பல திட்டங்களை கொண்டு வரவுள்ளோம்.
இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் நாம் எடுக்கவுள்ளோம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேயிலை விலை குறைந்து காணப்பட்டது. ஆனால் இந்த ஆட்சிக்கு வந்ததன் பின்பு தேயிலையின் விலை அதிகரிப்பு கண்டுள்ளது என சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நிலையில் கூடிய விரைவில் இந்த மக்களுக்கான மேன்பாட்டு திட்டங்களை எங்களின் அமைச்சின் ஊடாக செய்வொம் எனவும் தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு அரசாங்கம் எவ்வித பாகுபாடுகளும் அற்று பேதமின்றி செயற்படும்.
அதேவேளை எமது நாட்டில் இருக்கின்ற சிலர் நிறுவனங்களும் சர்வதேச ரீதியில் இயங்கும் நிறுவனங்களும் இலங்கை தேயிலைக்கு ஒரு சிறந்த விலையை கொடுக்க வேண்டும் என வழியுறுத்துவதற்கு நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வேண்டுக்கோள் ஒன்றை முன்வைப்பதாகவும் அவர் இதன்பொது மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)



