மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி இன்று 28 ஆம் திகதி கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் நடைபெறுகின்றது.
தேயிலை சாயம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இக்கண்காட்சியை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பார்வையிடமுடியும் என நிகழ்வு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
மலையகத் தமிழர்களின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் வலி சுமந்த வாழ்க்கையை எடுத்துக்காட்டும் காட்சிகளும் உள்ளன.
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஊவா சக்தி நிறுவனம், சுயசக்தி நிறுவனம் என்பன இணைந்து அனுசரணை வழங்குகின்ற இக்கண்காட்சிக்கு ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் என பல முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் இன்று காலை கண்காட்சியை பார்வையிட்டனர்.
க.கிஷாந்தன், மலைவாஞ்ஞன்