தேவையான நேரத்தில் தேவையான இடத்திற்கு எனும் தொனிப்பொருளில் கொட்டகலை வைத்தி யசாலை புனரமைப்பு.

0
214

மத்திய மாகாண கிராம அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு தேவையான நேரத்தில் தேவையான இடத்திற்கு எனும் தொனிப்பொருளில் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு புனரமைப்பு நடவடிக்கைகள் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சாவித்திரி தலைமையில் மத்திய மாகாண கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக இன்று 10 ம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
மத்திய மாகாண கிராம அபிவிருத்தி வாரம் கடந்த 04 திகதி ஆரம்பித்து இன்று வரை நடைபெற்று வருகிறது குறித்த வாரத்தினை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் பல அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வாகன தரிப்பிடம் இல்லாமையினால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வந்தனர் இதனை நிவர்த்தி செய்யும் முகமாக வாகன தரிப்பிடமும், மிகவும் மோசமான நிலையில் காணப்படும் பிரேத அறையினையும் புனரமைத்து தருவதற்கும் அத்தோடு வாட்டுக்களுக்கு சுடுநீர் கருவிகள் பொய்லர் நான்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனால் வைத்தியசாலையினை துப்பரவு செய்வதற்கு கிராம சங்க உறுப்பினர்களால் சிரமதானம் ஒன்று மேற்கொண்டுள்ளதாக தலவாக்கலை கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் அனுர தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் மத்திய மாகாணத்தில் கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதற்கு இணையாக தலவாக்கலை பிரதேச செயலகத்தின் ஊடாக பல வேலைத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது இதில் இந்த பிரதேசத்தில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் வைத்தியசாலையான கொட்டகலை வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன அதனை நிவர்த்தி செய்வதற்கு இன்றைய தினம் ஒரு சிரமதானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கொட்டகலை பிரதேசத்தில் உள்ள சகல கிராம அபிவிருத்தி சங்கங்களையும் ஒன்றிணைத்து வைத்தியசாலை சுற்றுப்புற சூழலினை சுத்திகரிப்பு செய்து கொடுத்து விட்டு மிகவும் அத்தியவசியமாக காணப்படும் வாகன தரிப்பிடத்தினை இங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் இணைந்து செய்து கொடுப்பதற்கும் அதே நேரம் வாட்டுக்களுக்கு தண்ணீர் சுடவைப்பதற்கு தேவையான 04 சுடுநீர் கருவிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேபீல்ட்;, யுலிபீலட் ஸ்டோனிகிளிப், பத்தனை, ஹரின்டன், மவுன்வேணன,; போகாவத்த, டெலிகிளையார், திம்புல்ல ரொசிட்ட உள்ளிட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள் குறித்த செயப்பாட்டில் இணைந்துள்ளனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here