தொடருந்து தொழிற்நுட்பவியலாளர்கள் 29.05.2018. செவ்வாய்கிழமை மாலை 04மணியிலிருந்து பணிபறக்கனிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தொடருந்து சேவையில் மற்றயதுறைக்கும் வேதனத்தை அதிகரிக்கபட்டதை போன்று தமக்கும் வேதனத்தை அதிகரிக்கபட வேண்டுமென இந்த பணிபறக்கனிப்பு மேற்கொள்ளபடுவதாக தெரிவிக்கபடுகிறது.
இதனால் மலையக தொடருந்து சேவையானது பதுளையில் இருந்து கொழும்பு கோட்டையை புறப்படும் தொடருந்தும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் தொடருந்தும் முன் கூட்டியெ அறிவித்தபடி 04மணி பிறகு இடையில் காணபடுகின்ற தொடருந்து நிலையத்தில் நிறுத்தபடுமென அட்டன் தொடருந்து நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதேவேலை குறித்த தொடருந்து தொழிற்நுட்பவியலாளர்களின் பணி புறக்கனிப்பில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் குறித்த பணிபுறக்கனிப்பு இடம் பெறுமெனவும் தெரிவிக்கபடுகிறது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்);