அரச பெருந்தோட்ட யாகத்திற்கு சொந்தமான ரத்தோட்டை பிரதேச சபைக்கு உட்பட்ட நடுதோட்டத்தில் பம்பரகள பிரிவில் கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 350 தொடக்கம் நானூறு வரையிலான மரங்கள் தோட்ட நிர்வாகத்தினால் வெட்டப்பட்டது, இருப்பினும் சுற்றுச்சூழல் அதிகாரியின் விதிமுறை கேட்ப இன்னும் மீள் மரங்கள் நடுகை இடம்பெறவில்லை.
அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் அதே தோட்டத்தில் கட்டாரந்தென்ன பிரிவில் கிட்டத்தட்ட 586 மரங்கள் கடந்த வாரம் தொடக்கம் மத்திய மாகாண சுகாதார அதிகாரியின் அனுமதி உடன் மரங்கள் வெட்டுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மரங்கள் தோட்ட அதிகாரியினால் வெட்டப்பட்ட போதும் தோட்டம் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த நலனும் கிடைக்கப் பெறுவதில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் ETF பணமும் கொடுக்கப்படாமல் இன்னும் நிலுவையில் உள்ளது. ஒவ்வொரு தடவையும் மரங்கள் வெட்டப்படும்போதும் அல்லது பழைய தேயிலை தொழிற்சாலை கலட்டி அகற்றப்படும் போதும் தோட்ட நிர்வாகத்தினால் முன்வைப்பது தோட்டத் தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள ETF பணம் கொடுக்க வேண்டும் என்பதே ஆனால் இவை வாய் வார்த்தைகளில் மட்டுமே! செயற்பாட்டில் இல்லை, குறைந்தபட்சம் தோட்டத்தில் உள்ள இடிந்து லயன் குடியிருப்புகள் கூட தோட்ட நிர்வாகம் சீரமைத்து கொடுப்பதில்லை. அத்தோடு இறத்தோட்டை பிரதேசசபையின் உறுப்பினர்கள் இந்த மரம் வெட்டுவதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இதுதொடர்பாக பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் அறிக்கையிலும் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக இறத்தோட்டை பிரதேசசபையின் உறுப்பினர் எரோஷன் சுகுமாரன் கருத்து தெரிவிக்கையில் இந்த மரங்கள் வெட்டுதல் மூலம் கிடைக்கப்பெறும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் மக்களின் நலனுக்காக ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் ஒரே தடவையில் தொடர்ச்சியாக ஒரே பகுதியில் பெருமளவிலான மரங்கள் வெட்டப்படும் போது மழைக்காலங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு குடியிருப்புக்கள் பாதிக்கப்படலாம் என்பதும் கவனத்தில் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அத்தோடு மரங்கள் வெட்டுதல் விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதாகவும் இதனை அதிகாரிகள் கவனத்திற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்த மரம் வெட்டுதல் நடைபெறும் தோட்டம் கட்டாரங்தென்ன தோட்டம் ஆனது பாதுகாக்கப்படவேண்டிய நக்கல்ஸ் மலைத்தொடருக்கு அடி பாகத்தில் அமைந்துள்ளது, நீர்நிலைகள் வற்றி போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனை அனைத்தையும் கருதிக்கொண்டு உயர் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் இந்த அசாதாரண முறையில் மரம் வெட்டுதல் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நீலமேகம் பிரசாந்த்