கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் டன்சினன் பகுதியில் கட்டப்பட்ட மகாத்மா காந்தி புரத்தில் 148 வீடுகளில் பல வீடுகள் தாழிறங்கியுள்ளதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பெய்து வருகின்ற அடைமழையால் வீட்டின் முற்புறமும், பிற்பகுதியிலும் உள்ள மண்மேடுகள் இடிந்து விழுவதினாலும் மண் திட்டுக்கள் கீழ் இறங்குவதாலும் வீடுகளும் சேர்ந்து தாழிளங்குவதால் அச்சமன சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரங்களில் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது தொடர்பில் சம்பவமிடத்துக்கு சென்று பார்வையிட்ட டன்சினன் வட்டார கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் ரஜினிகாந்த் இவ்விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனுக்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் அதேசமயத்தில் தோட்ட நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்