தொடர் மழை நானுஓயாவிலும் வெள்ளம் வீடுகள் விவசாய நிலங்கள் பாதிப்பு

0
137

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது

சனிக்கிழமை (04) பிற்பகல் இடைவிடாது பெய்த வரும் கடும் மழை காரணமாக வெள்ளபெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் டெஸ்போட் , கிரிமிட்டி , கிளாரண்டன் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கத்தால் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக நானுஓயா டெஸ்போட் (சீனிகத்தாலை) தோட்டத்தில் 8 க்கும் அதிகமான வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன் மேலும் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது இந்த வீடுகளில் குடியிருந்த 8 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கான தேவையான சமைத்த உணவு, குடிநீர் வசதிகளை தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றன.

எனினும் மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பா நானுஓயா கிளாரண்டன் மற்றும் டெஸ்போட் பகுதிகளில் அதிகளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் வெள்ளம் ஏற்பட்டமை விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் எனவும் . தமது வீட்டில் ஒரு அறையேனும் இல்லாமல் வீடு முழுவதும் வெள்ள நீராக காணப்படுவதாகவும், தமது அலுமாரியில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் என பல பொருட்கள் வெள்ள நீரில் சேதமாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

 

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here