கடந்த அரசாங்கத்தின் போது தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் வைத்துமக்களுக்காகவும் பதிவு செய்யபட்ட விளையாட்டு கழகங்களுக்காகவும்உபகரணங்கள் மற்றும் கணணிகள் என்பன வழங்கபட்டு கொண்டிருந்த வேலை நீதிமன்றத்தின் உத்தரவிணை பெற்று வந்து மக்களுக்கு கையளிக்கபட விருந்த உபகரணங்கள் அனைத்தும் பொலிஸாரை கொண்டு பிடுங்கபட்ட சம்பவம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் வைத்து இடம் பெற்றது
அதன் பிறகு குறித்த மைதானத்தை பெயர்மாற்றம் செய்து மலைநாட்டு புதிய
கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர்
தலைமையில் குறித்த நோர்வூட் விளையாட்டு மைதானம் பொறுப்பேற்க்கபட்டுள்ள
போதும் அங்கு சேகரிக்கபட்டு வைத்த உபகரணங்களை மக்களுக்கு முறையாக
வழங்கபடாமையினால் தற்பொழுது மக்களுக்கு வழங்க முடியாத சூழ் நிலை
காணப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றனர்.
15.11.2018.வியாழக்கிழழை மக்களுக்கான ஒரு சில உபகரணங்கள் புதிதாக
நியமிக்கபட்டுள்ள மலைநாட்டு புதியகிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும்
சமூதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையில்
மக்களின் பாவனைக்காக உபகரணங்கள் கையளிக்கபட்ட போதே உரிய அதிகாரிகள் இங்கு
காணபட்ட நிலமையை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளளதாக நோர்வூட்
தொண்டமான் விளையாட்டு மைதானத்தின் அதிகாரிகள் தெரிவித்தை அடுத்து காணபட்ட
நிலமை தொடர்பான புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வழங்கபட்டதையும்
குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)