தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளம் விடயம் தொடர்பிலான போராட்டங்கள் தொடருமானால் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக நீதி மன்றம் செல்லவிருப்பதாக ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்
பெரியசாமி பிரதீபன் ஆவேசம்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள போரட்டம் தொடருகின்ற வேலையில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்காத முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராகவும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா
தருவதாக தேர்தல் காலபகுதியில் வாக்குறுதி அளித்ததன் தொடர்பிலும் தொழிலாளர்களின் உரிமைகள் மீறபட்டமை தொடர்பிலும் வெகுவிரைவில் நீதிமன்றத்தினை நாடி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர
கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேசசபையின் உதவி தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
10.12.2018.திங்கள் கிழமை ஸ்ரீலாங்கா சுதந்திர கட்சியின் பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போதே இதனை தெரிவித்தார்
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பெரியசாமி பிரதீபன் 2015ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக தலவாகலையில் வைத்து தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தினை பெற்று தருவதாக முன்னால் பிரதமர் ரணில்விக்ரசிங்க
அவர்கள் வாக்குறுதி அளித்து இருந்தார் ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றபடவில்லை இதற்க்கு பிரதான காரணம் என்ன தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளை முன்னால் பிரதமர் ரணில்விக்ரம சிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்தவர்கள
கொள்ளையடித்து விட்டார்கள் என ஒரு சந்தேகம் நிலவுகிறது தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளை அவர்கள் மோசடி செய்து இருக்கிறார்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையக பகுதியிலே தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை
தொடர்பான ஆர்பாட்டங்கள் இடம்பெற்ற போது முன்னால் பிரதமர் ரணில்விக்ரமசிங்க எவ்வித கவனமும் செலுத்தவில்லை இருந்த போதிலும் தற்பொழுது நிறைவு பெற்று புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடபட விருக்கின்ற புதிய கூட்டு
உடன்படிக்கையிலே நிச்சயமாக தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தை பெற்று கொடுக்க வேண்டும் என்ற நோக்கோடு இன்று மலையகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களை சார்ந்த தொழிலாளர்களும் போராடி வருவதோடு
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு ஒரு அழுத்தத்தை வழங்கி வருகின்றனர்.
ஆனால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுதருகிறேன் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என கூறி வாக்குறுதி வழங்கிய முன்னால் பிரதமர் ரணில்விக்ரசிங்க அவர்கள் அண்மையிலே வாய்மூடி முதலாளிமார் சம்மேளனத்திற்கு அறிவித்து இருக்கிறார் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க
வேண்டாம் என கூறியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்
உண்மையிலே குழந்தையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுபவராகவும் முன்னால் பிரதமர் ரணில்விக்ரசிங்க செயல்பட்டு வருகிறார் ஏன் என்று சொன்னால் புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ள கெபினட் சபை மற்றும் புதிதாக நியமிக்கபட்டுள்ள பிரதமர்
மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் முற்பட்ட காலபகுதிலே கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஐந்து சுற்று பேச்சிவார்தைகள் முதலாளிமார் சம்மேளனத்தோடு இடம்பெற்ற போது தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா அண்மித்த தொகையினை
அவர்கள் தெரிவு செய்திருந்த போது கூட ஒரு இனக்கபாட்டுக்கு முதலாளிமார் சம்மேளனம் வந்திருந்தது ஆனால் இந்த அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக அப்படியே முடங்கி போய்விட்டது.
இதற்கு காரணம் என்ன தெட்ட தெழிவாக நான் கூறுகிறேன் ரணில்விக்ரசிங்க அவர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு மறைமுகமாகவோ அல்ல வேறு வழியிலோ ஒரு பணிப்புரையை விடுத்திருக்கலாம் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம்
ரூபா சம்பளத்தை பெற்று கொடுத்தால் ஐக்கிய தேசி கட்சிக்கு தோட்ட தொழிலாளர்கள் இனி வாக்களிக்க மாட்டார்கள் தற்பொழுது ஆட்சியிலே இருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உடைய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பான மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கே வாக்களிப்பார்கள் எனவே தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சியினர் பெற்று கொள்ள வேண்டுமானால் இந்த சந்தர்ப்பத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க கூடாது
என மறைமுகமான செய்தியை முதலாளிமார் சம்மேளனத்திற்கு வழங்கி இருப்பார் என ஒரு சந்தேக நிலை நிலவுவகிறது.
நாங்கள் ஒன்றை கூறுகிறோம் பல தோட்ட கம்பணிகளுக்கு சொந்தகாரராக இருக்கிறீர்கள் ரணில் விக்ரசிங்க அவர்களே நீங்களே முதலாளிமார் சம்மேளனத்தை வழிநடத்துகின்ற ஒரு ரிமோட் கொன்றலாக இயங்குகிறீர்கள் என்பதனை
நாங்கள் தெழிவாக தெரிந்து இருக்கின்றோம். எனவே நாங்கள் கேட்பது தோட்ட தொழிலாளர்களுக்கு நீங்கள் வாக்களித்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை நீங்கள் வாக்குறுதி அளித்த ஆயிரம் ரூபா சம்பளத்தை நீங்கள் பெற்று கொடுக்க தகுதி
இல்லாவிட்டாலும் நீங்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு வக்காளத்து வாங்காமல் ஓரத்தில் இருந்து வெடிக்கை பார்த்து கொண்டு இருங்கள் தொழிற்சங்க போராட்ட மூலம் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தை பெற்று
கொடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எஸ் .சதீஸ்