பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கம்பனிகள் பகல் அடித்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காது கம்பனிகள் அவர்களை பழிவாங்கி வருவதாக அவர் கூறினார்.
இது தொழிலாளர்களின் தொழில் உரிமை மற்றும் அடிப்படை உரிமையை மீறும் செயல் என மயில்வாகனம் உதயகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றில் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.