தொழிலாளர் தேசிய சங்கத்தின் கணக்காளராக நீண்டகாலம் சேவையாற்றிய கணேசனின் திடீர் மறைவானது தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் கணக்காளராக சேவையாற்றிய கணேசனின் மறைவையொட்டி அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் உரிய ஆலோசனைக்கேற்ப கணக்காளராக செயற்பட்டவர் கணேசனாவார். பிரதி நிதிச் செயலாளர் என்ற அடிப்படையில் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியவர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர் பீடத்தினரதும் சங்கத்தின் முழுநேர உத்தியோகத்தினரதும் நன்மதிப்பைப் பெற்றவர். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.