தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் அமரர் ஜே.எம்.செபஸ்டியனின் பூதவுடலுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் ஜே.எம்.செபஸ்டியன் சுகயீனம் காரணமாக கடந்த 26ஆம் திகதி காலமானார்.
அன்னாரின் பூதவுடல் 27 ஆம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் தலைமை பணிமனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அன்னாரின் இருப்பிடமான பொகவந்தலாவை
கல்கந்தை தோட்டத்தில் அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் இறுதி அஞ்சலி செலுத்தியதோடு இரங்கல் உரை ஆற்றினார்.
இவருடன் யால தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், பிரதி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்களும் ஏனையவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.