தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா.

0
119

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின விழா, 13.03.2022 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

பாலின சமத்துவம் உடைய உலகத்தை உருவாக்கு, சி190 என்ற தொழிலாளர்களின் சமவாயத்தை ஆதரிப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா மகளிர் பிரிவு தலைவியும், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான திருமதி. சரஸ்வதி சிவகுரு தலைமையில் நடைபெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், சங்கத்தின் பிரதி தலைவருமான மயில்வாகனம் உதயகுமார், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வின் போது மகளிரது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணி தலைவி உட்பட கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கும், சமூகத்திற்கு சேவையாற்றிய பெண்கள் உட்பட மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்த பெண்களுக்கும் பொன்னாடை போர்த்தி அவர்களின் சேவைகளை பாராட்டி கௌரவிப்பு நிகழ்வும், இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here