தொழிலாளியை தாக்கி குளிர்சாதனை பெட்டியில் அடைத்த அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்க கோரி மன்ராசி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கப்பத்தனை மன்ராசி தோட்டத்தின் தொழிலாளியான எஸ்அரவிந்தகுமார் அவர்களை தாக்கி குளிர்சாதன பெட்டியில் அடைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று காலை மன்ராசி தோட்ட தேயிலைக்கொழுந்து மடுவத்துக்கு முன்னால் 10.00 மணியளவில் தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டத்தில் தோட்ட அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்கும் வரை தாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது தோட்ட நிர்வாகத்தினால் நிர்வகித்து வரும் ஆக்ரோ கழகத்தில் நேற்று இரவு 8.00 மணியளவில் விருந்துபசாரமொன்று நடைபெற்றுள்ளது.
இந்த விருந்துபசாரத்தில் பணியாற்றவென மன்றாசி தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.அரவிந்தகுமாரும் மற்றுமொருவரும் சென்றுள்ளனர்.
அப்போது மது அருந்தியிருந்த கிளாஸ்கோதோட்ட முகாமையாளர் குறித்த நபரை தாக்கி அங்குள்ள குளிர்சாதனப்பெட்டியில் அடைத்துள்ளார். அடைக்கப்பட்ட அவர் குளிர்சாதனப்பெட்டியை உடைத்துக்கொண்டு அக்கரப்பத்தனை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவரை மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த ஆகராஸ் கிளப் அதிகாரிகளின் விருந்துபசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதற்கான செலவுகளை தோட்ட நிர்வாகமே செய்து வருவதாகவும் வாரம் ஒருமுறை இவ்வாறு விருந்துபசாரம் நடைபெறுவதாகவும் தொழிலாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்த விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கரபத்தனை நிருபர்