நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டினையடுத்து நுவரெலியா மாவட்டத்திலும் பல எண்ணை நிரப்பு நிலையங்களில் டீசலுக்காகவும், மண்ணெண்ணைக்காகவும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை உருவாகியுள்ளன. நேற்றை தினமும் ஹட்டன் பகுதியில் டீசலுக்காக வாகனசாரதிகளும் மண்ணெண்ணைக்காக பொது மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
போதியளவு எரிபொருள் கிடைக்காமையின் காரணமாக பல்வேறு தொழில் துறைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. டீசல் பற்றாக்குறை காரணமாக பாடசாலை சேவையில் ஈடுபட்டுள்ள பஸ் மட்டும் வேன் போன்ற பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களை கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும் பாடசாலை சேவையில் ஈடுபட்டுள்ள வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்டுள்ள பஸ்களுக்கு உரிய நேரத்தில் டீசல் கிடைக்காததன் காரணமாகவும் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதனாலும் உரிய நேரத்திற்கு செல்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் சேவையில் ஈடுபடுவதனால் பஸ்களில் பயணிகளின் நெரிசல் காடுப்படுவதாகவும் இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதே நேரம் டிசல் மற்றும் மண்ணெண்ணை இல்லாததன் காரணமாக சுயதொழில் நடவடிக்கைகள் விவசாயம்,தொழிந்சாலைகள் இயந்திரயங்கள் இயக்குபவர்கள்,கூலி வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விலை குறைத்து கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை உரிய நேரத்தில் எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்