தொ.தே. சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரம்- தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தி

0
186

தொ.தே. சங்கம் தலைவர் பி. திகாம்பரம் எம். பி. தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தி

நாட்டின் அரசியல் ஜனநாயகம் கேள்விக் குறியாகி விட்டது. இதனால் மக்கள் மிகவும் குழப்பமடைந்த நிலையில் காணப்படுகின்றார்கள். எனவே, ஜனநாயகம் நிலைக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயரவு விரைவில் கிடைக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராலோமன்ற உறுப்பினருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

நாட்டில் ஒருவரை வீழ்த்தி ஒருவர் அரசியல் செய்யும் கலாசாரம் பெருகி வருவதால் உண்மையான ஜனநாயகம் கேள்விக் குறியாகி வருகின்றது. இதனால், வாக்களித்த மக்கள் தத்தளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதிகாரம் இருப்பதால் எதையும் செய்து விடலாம் என்ற ரீதியில் எப்படியாவது அதிகாரத்துக்கு வந்து விட்டால் போதும் என்று நினைக்கின்றார்கள். ஜனநாயாகம் பாராளுமன்றத்தின் ஊடாகவே கட்டிக் காக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதேபோல், ஜனநாயகத்தின் மீது மதிப்பு வைத்துள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வந்து நிலையான ஆட்சிக்கு வழிவகுக்க வேண்டும்.

மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு கம்பனிகள் இணங்கி வருவதாகத் தெரியவில்லை. இதை உணர்ந்து தான் கம்பனிகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் முதன் முதலாக முன்னெடுத்து தொழிலாளர்களை விழிப்படையச் செய்தோம். அன்று நாம் மேற்கொண்ட போராட்டம் காரணமாக இன்று மலையகமெங்கும் தினசரி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், தொழிலாளர்களின் போராட்டங்கள் ஊடாகவே இது வரை காலமும் சம்பள உயர்வைப் பெற்றுக் கொள்ள நிலை இருந்து வந்துள்ளது. இம்முறையும் போராட்டத்தின் ஊடாகத் தான் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைக்கு தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தள்ளப்பட்டுள்ளார்கள். கூட்டு ஒப்பந்தம் காலாவாதியாகி ஒரு மாதம் ஆகி விட்டது. தீபாவளிப் பண்டிகைக்கு முன்னர் சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. எனவே, தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு காணப்படும் போது தான் அவர்கள் பண்டிகைகளை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியும். எனவே, விரைவில் சம்பள உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ஸ்திரத் தன்மை உருவாகி மக்கள் நிம்மதியாக வாழ மலரும் தீவாவளிப் பண்டிகை வழி சமைக்க வேண்டும்

 

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் வாழ்த்துச் செய்தி

 

அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாத காரணத்தால் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் முகங் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. மலரும் தீபத் திருநாளில் அனைத்தும் நீங்கி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ். சிவகுமார் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

மக்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்தும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் அமைய வேண்டும். எனினும், எமது நாட்டில் அரசியல் குழப்பகரமாகவே அமைந்துள்ளது. இதனால், சாதாரண மக்கள் முதற்கொண்டு அனைவரும் ஒருவகையான விரக்தி கொண்ட மன நிலையிலேயே அன்றாடம் பொழுதைப் போக்க வேண்டியுள்ளது.

அரசியல் பலம் யாருக்கு இருகின்றது என்ற போட்டியில் ஜனநாயக கேலிக் கூத்தாக மாறி வருகின்றது. பொருளாதார ரீதியில் மக்கள் பாரிய சுமைக்கு ஆளாகி வருகின்றார்கள். இந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு முழு மலையகமும் குரல் கொடுத்து வருவது போல, தலைநகரில் இளைஞர்களின் எழுச்சியும் வலு சேர்த்துள்ளது. வேதன அதிகரிப்பு இல்லாமல் விலைவாசி உயர்வு காரணமாக தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதிலும், பிள்ளிகளின் கல்வியில் அக்கறை காட்டுவதிலும் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றாகள்.

அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாத காரனத்தால் எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற அச்சத்திலும், நெருக்கடியிலும் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு தீபாவளி முடியும் போது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கிட்ட வேண்டும் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பட்டுள்ளார்.

 

( மஸ்கெலியா நிருபர் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here