பதுளை, பசறை, மடுல்சீமை மற்றும் லுனுகல ஆகிய பகுதிகளை சேர்ந்த தோட்டக் கமிட்டி தலைவர்களைச் சந்தித்து, பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் தற்போது எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதொகாவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார்.
அத்துடன் தோட்ட நிர்வாகத்துடன் இப்பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் ஹல்துமுல்ல பிரதேச சபை தலைவர் அசோக்குமார், ஊவா மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான கணேசமூர்த்தி , சிவலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.