தோட்டத்தில் இடம்பெறும் கொவிட் மரணங்களை இலவசமாக தகனஞ் செய்ய வேண்டும்_ சோ.ஸ்ரீதரன் முக்கிய கோரிக்கை.

0
135

பெறும் பொருளாதார சிரமத்திற்கு மத்தியில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் போது அந்த சடலங்களை இலவசமாக தகனஞ் செய்ய வழி செய்ய வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இன்று (26) ஹட்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடந்து கருத்து தெரிவிக்கையில்
பெருந்தோட்டங்களை பொறுத்த வரையில் இன்று தோட்டத்தொழிலாளர்கள் பெரும் பொருளாதார சிரமங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றன தோட்ட நிர்வாகங்கள் இவர்களுக்கு வேலை நாட்கள் குறைக்கப்பட்டு வேலை வழங்குவதனால் ஒரு சில குடும்பங்கள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலையே காணப்படுகின்றன.

அவ்வாறான ஒரு சூழ் நிலையில் இன்று தோட்டங்களில் கொரோனா மரணங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன ஹட்டன் பொகவந்தலா நோர்வூட்,மஸ்கெலியா நோர்வூட் உள்ளிட்ட பல இடங்களில்; கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களை தகனஞ் செய்வதற்கு 40,000 ரூபா கோராப்படுகின்றன.

அது மாத்திரமின்றி ஒரு வீட்டில் மரணம் ஏற்பட்டால் அவர்கள் வீடு தனிமைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் எவ்வாறு அவரகள் காசு திரட்டுவது எவ்வாறு தகனம் செய்வது? ஆகவே இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு தொடர்ந்து தமது உழைப்பினை பெற்றுக்கொடுக்கும் தோட்டத்தொழிலாளர்கள் இறப்பின் போது ஏனைய பகுதிகளை போல் இலவசமாக தகனஞ் செய்வதற்கு உள்ளுராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் தகனஞ்சாலைகளுக்கு அனுமதியினை பெற்றுக்கொடுக்க மத்;திய மாகாண ஆளுனர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் தோட்த்தொழிலாளர்கள் மேலும் வறுமை நிலைக்கு தள்ளாப்பட்டு திராத கடனாளியாக மாறுவதனை தவிர்க்க முடியாது ஆகிவிடும் என தெரிவித்தார். அதே நேரம் ஏனைய பகுதிகளில் மரணங்கள் இடம்பெறும் போது அரசாங்கத்தின் செலவில் தான் தகனஞ் செய்யப்படுகின்றன.

தகனஞ்சாலைகளுக்கு கொண்டு செல்வதகும் நோய்காவு வண்டியினை தான பயனப்படுத்தப்படுகின்றன ஆனால் மலையகத்தில் மாத்திரம் சடலங்களை கொண்டு செல்வதற்கு தனியார் சடலகாவு வண்டியினை பயன்படுத்துவதால் தொழிலாயர்கள் பாரிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்தாக தோட்டங்களில் கொரோனா அச்சுறுத்தல் மிக வேகமாக அதிகரித்துள்ளன அதனை தடுப்பதற்கான நடவடிக்கை மந்த கதியில் தான் இடம்பெற்று வருகின்றன.இன்று நாட்டில் பயணக்கட்டுபாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் தொழில் செய்கின்றனர்.ஆனால் தொற்று நீக்க நடவடிக்கைகள் விழிப்புணர்கள் மிகவும் மந்த கதியில் தான் நடைபெறுகின்றன.

இதன் காரணமாக பொகவந்தலா, அம்பகமுவ,ஹட்டன் உள்ளிட்ட பல தோட்டப்பகுதிகளில் அதிகமான தொற்றாளர்கள் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.ஆகவே மனித வள தாபனம் மற்றும் பிரஜாசக்தி நிறுவனம் தோட்ட நிர்வாகம் ஆகியன சுகாதர பிரிவினருடன் இணைந்து இதய சுத்தியுடன் செயப்பட வேண்டும் இன்று தோட்டப்பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக் மாத்திரம் தான் தடுப்பூசி போடப்படுகின்றன.

தற்போது 80 சதவீதமானவர்களுக்கு மாத்திரம் தான் வழங்கப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன்.ஏனையவர்களுக்கு வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்திலும் பலர் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வாழ்வதனாலும் அவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதில்லை இவற்றை அரசாங்கம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இதே நேரம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு இணை வழிகல்வி முறைமையில் கற்றல் கற்பித்தல் செயப்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.இது நகர புறத்தினை பொருத்த வரையில் பொருத்தமானதாக இருந்தாலும் கூட தோட்டங்களை பொருத்த வரையில் இந்த இணைய வழிமுறையினை பின்பற்றுவதற்கு கட்டாயம் விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்கள் இருக்க வேண்டும் ஆனால் தோட்டத்தொழிலாளர்களை பொருத்த வரையில் அவர்கள் இந்த ஸ்மார்ட் போன்களை பெற்றுக்கொடுக்க முடியாது ஆகவே மிகவும் பற்றாக்குறைகளுக்கு மத்தயில் முன்னெடுக்கப்படுகின்ற தோட்ட கல்வி நிலைமை மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாகும்.

அதே நேரம் இணைய வழிகல்வியினை பெருவதற்கு தொலைபேசி இணைப்புனக்கள் இருக்க வேண்டும் அதுவும் 3ஜி தொழிநுட்பம் இருந்தால் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம் பேருவாரியான தோட்டங்களில் தொலைபேசி கூட எடுக்க முடியாத நிலையில் இவர்கள் எவ்வாறு இந்த கல்வியினை பெறுவது எனவே அரசாங்கம் ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகளை மிக விரைவாக பெற்றுக்கொடுத்து உரிய சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைய பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுகப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் மேலும் தெரிவித்தார்.

 

 

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here