நாட்டில் ஏற்பட்டு;ள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களின் இன்று பசியிலும் பட்டியினியிலும் வாடிக்கொண்டிருக்கின்றனர் இதனால் அவர்களின் பிள்ளைகளின் கல்வி சுகாதாரம் போசாக்கு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த போது தனி ஒரு தொழிற்சங்கம் முன்னின்று தனித்து முடிவெடுத்ததன் பயனாக் அவர்களின் சம்பள பிரச்சினை இன்று வரை தீர்க்க முடியாமல் போய்வுள்ளது. எனவே இனி வரும் காலங்களிலாவுது அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் என மலையக மக்கள் சக்தியின் தலைவர் ராமன் செந்தூரன் தெரிவித்தார்.
கொட்டகலை கொமர்சல் பகுதியில் இன்று 07 ம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவி;க்கையில் இன்று மலையகத்தில் உள்ள மிகப்பெரிய தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் இணைந்தே செயப்பட்டு வருகிறது இவர்கள் நினைத்திருந்தால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 22 கம்பனிகளிடம் பேசி தோட்டத்தொழிலாளர்கள் நியாமான சம்பளத்தினை பெற்றுக்கொடுத்திருக்கலாம் அவ்வாறு பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அவர்களின் அரசாங்கத்திலிருந்து வெயியேறியிருக்க வேண்டும் காலம் காலமாக தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றி ஆடுகின்ற நாடகத்தினை உடன் கைவிட்டு அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் அவ்வாறு இல்லாது தான் தோன்றித்தனமாக முடிவெடுத்தால் எதிர்வரும் தேர்தலில் மக்கள் நிச்சயம் சரியான பாடத்தினை படிப்பிப்பார்கள் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் மலையக மக்கள் சக்தியின் முக்கியஸ்த்தர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்