தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டாலும் கூட அது முறையாக வழங்கப்படுவதில்லை கடந்த காலத்தில் சம்பள நிர்னைய சபையின் மூலம் ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் அந்த சம்பளம் இது வரை முறையான வகையில் வழங்கப்படவில்லை என்று தான் கூற வேண்டும் மாறாக தொழிலாளர்களின் வேலை பழுக்கள் மாத்திரம் தான் அதிகரிக்கப்பட்டன கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருந்து போது சம்பளம் அதிகரிக்கப்பட்ட போது கம்பனிகள் தேயிலை கொழுந்தின் அளவினை தான் அதிகரித்தன 25 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என்று கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் 12,14 நாட்கள் மாத்திரம் தான் வேலை வழங்கப்படுகிறது. இதனால் தனது ஜீவன உபாயத்திற்காக மேலதிக நேரங்கள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தொழிலாளர்கள் தலைநகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இன்று 80 தொழிலாளர்கள் வரை குறைந்துள்ளதாகவும் எனவே சம்பளம் அதிகரிக்கப்படும் முறையான சட்டங்களையும் கொண்டுவரப்பட வேண்டும் என இலங்கை செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் இன்று 10 ம் திகதி ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 1998 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை கூட்டு ஒப்பந்ததில் மூலம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சம்பளம் அதிகரிக்கப்பட்டு வந்தது.2021 அண்டுக்கு பின் சம்பள நிர்னைய சபையின் மூலம் சம்பளம் அதிகரிக்கப்பட்ட பிறகு தொழிலாளர்களின் சம்பளம் இருந்ததை விட குறைந்துள்ளது.அவர்களுடைய எடுக்கும் கொழுந்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.அது மாத்திரமின்றி அவர்களின் அடிப்படை தேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.கூட்டு ஒப்பந்தத்தில் இருந்த சலுகைகள் இல்லாதாக்கப்பட்டு தொழிலாளர்கள் மிகவும் மோசமான நிலையில் வாழகூடிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் 10 லட்சமாக இருந்த தொழிலாளர்கள் ஒரு வட்சத்திந்கும் குறைந்து சுமார் 80ஆயிரம் தொழிலாளர்கள்; தான் தோட்டப்பகுதியில் நிரந்தர தொழிலாளர்களாக இருக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.ஏனையவர்கள் நிரந்தர தொழிலாளர்களாக இருந்து அன்றாடம் கைக்கூலிகளாக மாற்றப்படுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.
அன்று இருந்த வாழ்க்கை செலவு நாளைந்து மடங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.காலனித்துவ ஆட்சியின் போது 2 கிலோ மாவுக்கு வேலை செய்து கைக்காசுக்கு வேலை செய்கின்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனால் தோட்டங்களை விட்டு தொழிலாளர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் போது அது எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்ற தெளிவினை வழங்க வேண்டும் அத்தோடு தொழிலாளர்களுக்கு சட்டங்கள் முறையாக கொண்டு வரும் அதே நேரம்,தொழிலாளர்களின் வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் செங்கொடி சங்கத்தை பொறுத்த வரையில் 2021 ஆண்டிலிருந்து இன்று வரை கூட்டு ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டு அதில் முறையான சட்டதிட்டங்களை உட்புகுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் என இதன் போது மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்