தோட்டத்தொழிலாளர்களுக்கு எல்லா தேவைகளும் பூர்த்திச்செய்யப்பட்டுள்ளன எனகையெழுத்து வாங்க வந்த அதிகாரிகளை விரட்டியடித்த நுவரெலியா பிரதேச சபை தலைவர்!!

0
194

தோட்டத்தொழிலாளர்களுக்கு எல்லா தேவைகளும் பூர்த்திச்செய்யப்பட்டுள்ளன என தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றி கையெழுத்து வாங்க வந்த அதிகாரிகளை விரட்டியடித்தார் நுவரெலியா பிரதேச சபை தலைவர்.
நுவரெலியா பிரதேசசபைக்கு உட்பட்ட மக்களை ஏமாற்றும் விதமாக இன்று பாரிய செயற்பாடு ஒன்று நடந்துள்ளமை நுவரெலியா மக்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.
சம்பளப்பிரச்சனையும் கூட்டு ஒப்பந்தமும் மலையகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் இவ்வாறானதொரு சம்பவம் அரங்கேறியிருக்கின்றமை கம்பனிகாரர்களின் சூழ்ச்சியாக இருக்குமோ என மக்கள் தங்களுக்குள்ளே பேசி வருகின்றனர்.

அதாவது இன்றைய தினம் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சமர்செட்,ஈஸ்டல் ஆகிய பகுதிகளுக்கு தோட்டத்தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு சிலர் அதிகாரிகள் சென்று தோட்டத்தொழிலாளர்களை தேயிலை மலையிலிருந்து வரசொல்லி தொழிலாளர்களுக்கு அனைத்து தேவைகளும் பூர்த்திச்செய்யப்பட்டுள்ளதாக சில ஆவணங்களை பூரணப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் அவ்விடத்திற்கு பிரவேசித்த நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் வருகைத்தந்த அதிகாரிகளிடம் பேசிய போது தாம் களனிவெலி பிளான்டேஷனில் இருந்து வருகைத்தந்துள்ளதாக கூறியுள்ளனர்.
IMG-20181128-WA0399 IMG-20181128-WA0395 IMG-20181128-WA0400
மேலும் அவர்கள் கையிலிருந்த ஆவணங்களை பிடிங்கியெடுத்தப்பட்டப்போது தோட்டத்தொழிலாளர்களுக்கு அனைத்து தேவைகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது என தோட்டத்தொழிலாளர்கள் வாக்குமூலம் அளித்தது போல பதிவுகள் இடப்பட்டிருந்தது.இச்செய்தியை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் வேலு யோகராஜ் தெரிவிக்க உடனே அவர் அவர்களை விரட்டியடிக்க உத்தரவு இட்டுள்ளார்.
தொடர்ந்து அவ் ஆவணங்களை பெற்றுக்கொண்டு நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் பொதுமக்களுடன் இணைந்து அவ் அதிகாரிகளை துரத்தியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here