நம் நாட்டின் முதுகெழும்பாக காணப்படுவது தேயிலையே எனவே அந்த தேயிலையை உற்பத்தி செய்யும் எம் மலையக மக்களை தோட்டத்தொழிலாளர்கள் என குறிப்பிடப்படாமல் தேயிலை உற்பத்தி விவசாயிகள் என அழைக்கப்பட வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடு கீழே விழும் போதெல்லாம் தூக்கி விடும் தூணாக இருந்தது தேயிலையே !கொரானா காலத்தில் நாடே பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்ற போது கைக்கொடுத்ததும் தேயிலை உற்பத்தியே எனவே நாம் அம்மகத்தான வேலையை செய்பவர்களை தேயிலை விவசாய உற்பத்தியாளர்கள் என அழைக்க வேண்டும்.
உலகத்தில் தேயிலை உற்பத்தில் முதலிடம் சீனா வகித்தாலும் இலங்கையும் தேயிலை உற்பத்தியில் வளர்ச்சியடைந்து வரும் நாடாக இலங்கை உள்ளது.என அதை உற்பத்தி செய்யும் எம் மலையக சமூக மக்களை கௌரவமாக தேயிலை விவசாய உற்பத்தியாளர்களென அழைக்க வேண்டும்.தோட்டத்தொழிலாளி,கூலித்தொழிலாளி என்ற பதம் நீக்கப்பட வேண்டும்.அதுமட்டுமல்லாமல் எதெற்கெடுத்தாலும் வீதிக்கு இறங்கி போராடி உரிமைகளையும்,சலுகைகளையும் பெற வேண்டிய நிலை மாறி அனைத்தையும் வழங்கி ஒரு கௌரவமிக்க சமூகமாக இலங்கையில் வாழ வழிவகைகளை நாட்டு அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
லமேகம் பிரசாந்த்