தோட்டத்தோழிலாளர்களின் தொடர் குடியிருப்பில் தீப்பரவல். இரண்டு வீடுகள் சேதம்.

0
200

ஹட்டன் எபோஸ்லி தோட்டப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்களின் குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் எபோஸ்லி மொண்டிபெயர் பிரிவில் தோட்டத்தொழிலாளர்களின் முதலாம் இலக்கம் கொண்ட தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்று (16) காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவிலில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

20 வீடுகள் கொண்ட தொடர்குடியிருப்பிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ பரவலினையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததன் காரணமாக ஏனைய வீடுகளுக்கு தீப் பரவுவது தடுக்கப்பட்டுள்ளன. இந்த தீப்பரலில் தொடர் குடியிருப்பில் உள்ள இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வீடுகளில் இருந்த தளபாடங்கள் உட்பட பல உடைமைகள் சேதமடைந்துள்ளன.

தீப்பரவல் மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன் தீப்பரவலுக்கான காரணத்தினையும் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here