தேயிலை தொழிற்துறையை பாதுகாப்பதற்கும் தொழிலாளர்களின்வருமானத்தை அதிகரிப்பதற்குமான முற்போக்கான திட்டமென்ற அறிமுகப்படுத்தலோடு பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு தேயிலைசெடிகள் எண்ணிக்கை அடிப்படையிலும் ஏக்கர் அடிப்படையிலும் தேயிலைக்காணிகளை பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.
குத்தகை காலம்குறிக்கப்படாது எவ்வித சட்டபூர்வமான உறுதிபத்திரமும் வழங்காது வெறுமனே தேயிலைக்காணிகளை பராமறிக்கச்சொல்வது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் இன்னுமொரு சுரண்டல் முறையாகும் இந்த சுரண்டல் முறைக்கு பலிகாடாவாக்காமல் தோட்டத்தொழிலாளர்கள் பாதுகாக்கப்படவேண்டும் இவ்வாறு ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய பொறுப்பாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது
பெருந்தோட்டவரலாற்றில் எந்தவொருகாலத்திலும் தொழிலாளர்களுக்கு திருப்திகரமான சம்பளம் வழங்கப்பட்டதாக வரலாறு இல்லை கடந்த கிட்டிய 200வருடங்களாக தோட்டத்தொழிலாளர் பல்வேறுவகையானசுரண்டலுக்கு முகம்கொடுத்தே வந்திருக்கின்றனர் கடந்த 40வருடங்களில் தொடர்ச்சியாக மலையக சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகவிருந்தும் கூட காலத்தின் வேகத்திற்கேற்றமாற்றம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.
இந்த நிலையில் புதிய புதிய முறையில் இந்த மக்களின் உழைப்பை சுரண்டி இம்மக்களை நவீன அடிமைகளாக வைத்திருப்பதற்கு எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
பெருந்தோட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டுமென்பதில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை தேயிலை உற்பத்திதொடர்பாக சகல நுனுக்கங்களையும் அனுபவரீதியாக தெரிந்துவைத்திருப்பவர்கள் இந்த தோட்டத்தொழிலாளர்களை தவிர வேறு எவரும் இருக்கமாட்டார்கள் ஆகவே தேயிலை தொழிற்துறையில் மிகச்சிறந்த மாற்றத்தை இவர்களால் ஏற்படுத்தமுடியும்
இந்த நாட்டுக்காக இவர்கள் மிக நேர்மையாக கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக உழைத்துக்கொடுத்துள்ளார்கள்.
நாடு அவர்களுக்கு நன்றிசெலுத்தவேண்டுமென்றால் சொந்தமாக இல்விட்டாலும் பரவாயில்லை தேயிலைக் காணிகளை சட்டபூர்வமான ஆவனத்துடன் நீண்டகால குத்தகைக்கு பெருந்தோட்டங்களில் நிரந்தரமாக வாழும் சகல குடும்பங்களுக்கும் பகிர்ந்துக்கொடுங்கள் அவர்கள் இருக்கும் தேயிலை காணிகளை சிறந்த முறையில் பராமறிப்பதோடு கைவிடப்பட்ட மற்றும் தரிசு நிலங்களிலும் தேயிலை பயிர்செய்கை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைசெய்வார்கள்
இவ்விடயத்தில் தொழிலாளர்கள் மிகத்தெளிவாக இருக்கவேண்டும் தொழிற்சங்க அரசியல் தலைவர்களை வழிநடத்துபவர்களாக தொழிலாளர்களும் சமூக உணர்வாளர்களும் வழிகாட்டிகளாக மாறவேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்