நாட்டில் ஏற்பட்டுள் கொவிட் தொற்றின் மூன்றாம் நிலையிலும் தமது உயிரை பணயம் வைத்து பணிக்கு செல்லும் தோட்டத் தொழிலாளர்களை 5000 ரூபா நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திலிருந்து ஒதுக்குவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை கண்டிப்பதுடன் இந்த விடயத்தில் கூடிய கரிசனை செலுத்து தொழிலாளர்களுக்கும் இந்த நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டுமென மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொவிட் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியில் தோட்டதொழிலாளர்கள் தினமும் வேலைக்கு செல்கின்றனர். தற்பொழுது நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் முக்கிய தரப்பினரில் தோட்டதொழிளார்களுக்கும் வகிக்கின்றனர்.
இவர்கள் மாத சம்பளம் பெறுபவர்கள் அல்ல. இவர்கள் நாட் கூலிகள்தான். வேலைக்கு சென்றால்தான் ஊதியம் கிடைக்கும். அதுவும் 20 kg கொழுந்து பறிக்க வேண்டும். எனவே 5000 ரூபா நிவாரணம் தோட்ட தொழிளார்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அதுமட்டுமல்ல பயணத் தடை 7ம் திகதி வரை நீடிக்கபட்டுள்ளது. தொழிளார்களுக்கு 10 திகதி தான் சம்பளம் வழங்கப்படும். அதுவரை அவர்களின் நிலமை என்ன? அனைவரும் ஒற்றுமையாக இந்த விடயத்தை அரசாங்கத்திற்கு எடுத்து கூறி நிவாரணத்தை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்