நுவரெலியா மாவட்டத்தில் தோட்டப்பகுயதில் பரவி வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொட்டகலை பொது சுகாதார அதிகார பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் 20 வயதி;ற்கு மேற்பட்ட சைனாபார்ம் முதலாம் டோஸ் பெற்றுக்கொடுக்கப்பட்ட சுமார் 720 பேருக்கு இன்று (02) திகதி இரண்டாவது டோஸ் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விடுப்பட்டவர்களுக்கு கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக கொட்டகலை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.
கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் 20 வதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு தோட்ட நிர்வாகத்தினால் விடுமுறையும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்.