தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழியுருத்தி பொகவந்தலாவையிலும் ஆர்பாட்டம்பெறுந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவை வழங்குமாறு கோரி பொகவந்தலாவ பகுதியில் உள்ள 11தோட்டங்களை சேர்ந்த 35பிரிவு மக்கள் தொழிலுக்கு செல்லாமல் தமது எதிர்ப்பு ஆர்பாட்டத்தை தெரிவித்தனர்.
இதன் போது பொகவந்தலாவ நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டமானது பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலையில் இருந்து பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட சந்திவரையில் பேரணியாக வந்து தமது கோசத்தை வெளிபடுத்தி தமக்கு ஆயிரம் ரூபாவினை கம்பணி காரர்கள் வழங்கபட வேண்டும் என கோரியூம் இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இன்று பொகவந்தலாவ நகரில் இடம் பெற்ற ஆர்பாட்டத்தில் சுமார் 500கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்