தோட்ட தொழிலாளர்களின் போஷாக்கு குறைபாட்டை நீக்க புதிய வேலைத்திட்டம்!!

0
156

தோட்ட தொழிலாளர்களுக்கு சத்துணவு குறைவடைந்து காணப்படும் தொடர்பில் இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய வேலைத்திட்டம்தோட்ட தொழிலாளர்களின் மத்தியில் போஷாக்கு குறைபாடு தொடர்பில் இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கபட்டுள்ளது

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக தோட்டபகுதிகளில் காணபடுகின்ற குளங்களில் இதுபோன்ற மீன் குஞ்சுகள் வளர்க்கும் வேலைதிட்டத்தை இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் மற்றும் நுவரெலியா காரியாலயத்தின் முகாமையாளர் ஆகியோரால் முன்னெடுக்கபடுவதாக புத்திக்ககுஷான் அவர்கள் தெரிவித்தார்

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அட்டன் ஸ்டெதன் பன்மூர் ஆகிய தோட்டபகுதிகளில் உள்ள குளங்களில் ஜயன்காவ்ட்இமற்றும் புலுதிலாப்பி என்ற இனங்களை கொண்ட 24000குஞ்சுகள் குளங்களில் இடபட்டதாக இலங்கை தேசிய நிர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நுவரெலியா காரியாலயத்தின் பிரதான உத்தியோகத்தர்களினால் 06.08.2018 திங்கள் கிழமை மேற்கொள்ளபட்டது.

18

இந்த நிகழ்வின் போது பெருந்திரளான தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த மீன்வளர்ப்பு வேலைதிட்டம் மட்டும் அல்லாது விவசாய தொழிலை மேம்படுத்திக் கொண்டு அதன் ஊடாகவும் ஒரு வருமானத்தை பெற்று கொள்வதாகவும் தெரிவித்தனர்

இந்த குளங்களில் இட்பட்ட மீன்குஞ்சுகள் ஒரு வருடத்திற்குள் ஒன்றரை அல்லது இரண்டு கிலோ நிறையை கொண்டதாக காணபடும் எனவும் தெரிவிக்கபடுகிறது. மேலும் இந்த குளங்களில் இடபட்ட மீன் குஞ்சுகள் சில நாட்கள் கடந்த பின்பு இரண்டு மடங்குகளாக அதிகரிக்குமெனவும் தெரிவிக்கபடுகிறது. குறித்த மீன் குஞ்சுகள் குறிப்பிட்ட காலம் சென்றபின் தோட்ட தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கபடுமெனவும் இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்தது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here