தோட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவால் உயிரிழந்த தொழிலாளியின் மரணத்துடன் சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகத்தினர் பொலிஸாரால் கைது.

0
185

கனவரெல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த 25 வயதுடைய இளைஞர் உயிரிழந்ததையடுத்து, தோட்ட நிர்வாகத்தின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்ததாலும், தோட்ட நிர்வாகத்திடமிருந்து நியாயமான தீர்வு எட்டப்படாமையாலும் பூதவுடல் அடக்கம் செய்யப்படாமல் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தலையீட்டால் தொழிற்சாலையில் பலவந்தமாக வைக்கப்பட்டது.

இந்நிலையில் இ.தொ.காவின் தொடர் அழுத்ததினால் 5வது நாளான நேற்று இச்சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட நிர்வாகத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்டதையடுத்து பூதவுடல் தொழிற்சாலையிலிருந்து இளைஞனின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here