தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொடுக்க வேண்டியவற்றை இன்று அரசாங்கம் பெற்றுக்கொடுக்கிறது.

0
183

தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொடுக்க வேண்டியவற்றை இன்று அரசாங்கம் பெற்றுக்கொடுக்கிறது தோட்டத்தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தோட்ட நிர்வாகமே பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் தொழிலாளர்களின் குடியிருப்பு பராமரிப்பு, குடிநீர் பாதை என பல விடயங்கள் தோட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் ஆனால் இன்று அந்த காரியங்களை அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளும் செய்து வருவதாக நீர்பாசன துறை அமைச்சின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் இணைப்புச் செயலாளர் எஸ் ஜோதிவேல் தெரிவித்தார்.

நீர்பாசன துறை அமைச்சின் சுமார் 19 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பூண்டுலோயா எரோல் கீழ்பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி திசாநாயக்க தலைமையில் இன்று (31) நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

இந்த குடிநீர் திட்டமானது தோட்ட அதிகாரிகளினால் உங்களுக்கு வழங்க வேண்டிய விடயம். இந்த அதிகாரிகள் அதனை வழங்காததனால் இன்று அரசாங்கத்தினை நாடி வந்துள்ளீர்கள். அதற்கு கூட பல தோட்டத்துரைமார்கள் அனுமதி வழங்காமல் இருந்திருக்கிறார்கள். இதே நிர்வாகத்தினைச் சேர்ந்த மடக்கும்புர தோட்டத்தில் அசுத்தமான நீருக்கு அருகில் குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது உத்தரவாதம் இல்லாத ஒன்று அமைச்சின் செயலாளர் என்ற வகையில் உங்களுக்கு சொல்கின்றேன் இது ஒரு நல்லதிட்டம். இதற்கு அரசாங்கத்தினால் 100 ரூபாய் வழங்கப்படுகின்றது என்றால் 80 ரூபாயினை காசாக தருவோம் மீதி 20 ரூபாயினை நீங்கள் சிரமதானமாக செய்யவேண்டும். இதற்கு யாரும் ஒப்பந்தக்காரர்களை நியமிக்கப்போவதில்லை. ஒப்பந்தக்காரர்கள் மோசடி செய்கிறார்கள் மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த திட்டத்திற்கு நீங்களே அங்கத்தவர்கள் உங்களுக்குள் அங்கத்தவர்களை தெரிவுசெய்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுங்கள். இந்த திட்டமானது கஸ்டப்படும் மலையக மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது எனவே இதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அத்தோடு இன்று தோட்ட அதிகாரிகள் பெற்றுக்கொடுக்க வேண்டிய சலுகைகள் எதுவும் பெற்றுக்கொடுப்பதில்லை இந்நிலையில் தான் உங்களுக்கு 900 ரூபா பெற்றுக்கொடுத்து வருகிறார்கள் இந்த 900 வைத்துக்கொண்டு தொழிலாளர்கள் சாப்பிட்டு பிள்ளைகளையும் படிக்க வைத்துள்ளார்கள் இன்று நுவரெலியா மாவட்டத்தில் அதிகமானவர்கள் படித்து நல்ல நிலையில் இருக்கிறார்கள் இது வடமாகாணத்துடன் ஒப்பிடுiயில் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இன்று மலையகத்தைச் சேர்ந்த பலர் பல்வேறு உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள் அத்தோடு இன்று தோட்டங்கள் 99 வருடத்திற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன ஆகவே நீங்கள் அனைவரும் 99 வருடத்திற்கு இந்த தோட்டத்தில் வாழ வேண்டும் ஆகவே உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பல அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன அது தனி ஒரு இனத்திற்கு சொந்தமானதல்ல ஆகவே அவற்றை பயன்படுத்திக்கொண்டு சேவைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த குடிநீர் திட்டத்தின் மூலம் ஏரோல் கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் நன்மையடைய உள்ளன. இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க ,மக்கள் பிரதிநிதிகள், நீர்பாசன மற்றும் வடிகால் திணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here