தோட்ட நிர்வாகங்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு கெடுபிடி விதிப்பது, தொழிலாளர்களை பழிவாங்குவது, 1000 ரூபாய் சம்பளமாக பெற்றும் பெறமுடியாமல், தவிப்பு, தொழிற்சங்க உரிமை மறுக்கப்படுவது சம்பந்தமாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் சர்வதேச தொழிலாளர் ஸ்தானத்திற்கு முறையிட்டதை தொடர்ந்து, அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் 05/07/2020 ஹட்டன் தலைமை காரியாலயத்தில், பிராந்திய இயக்குனர்களான எம்.கனகராஜ், கே.செல்வநாதன், எஸ்.நடராஜா, எஸ்.வரதராஜா, ஆர்.விஜயகுமார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன், தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயளாளர் க.சுப்ரமணியம், சிரேஸ்ட உப தலைவர் எஸ்.கின்னஸ், நிதி செயலாளர் புஷ்பா விஸ்வநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தோட்டதொழிலாளர்களை வதைக்கும் அல்லது தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிராக செற்படும் தோட்ட நிர்வாகங்களை சட்ட ரீதியாக அணுகி தோட்ட தொழிலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்