ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் நடைபெறவுள்ளது.
இந்த விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய தேசிய அணி உலகக் கோப்பைக்கு தயாராக வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதன் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாட 26 வயதான ருதுராஜ் கைக்வாட் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
2007இல் 26 வயதில் இந்தியாவின் கேப்டனாக அறிமுகமான தோனியை போலவே தற்போது 26 வயதில் இந்திய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ருதுராஜ் அடுத்ததாக சென்னை அணியை வழி நடத்துவதற்கு தகுதியானவர் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதே முடிவை தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ruturaj Gaikwad to be captain of India Men's team for Asian games to be held in China.
Well what…??
Is it an indication that he is in contention to be the next CSK captain after Dhoni steps down??
👌👌@msdhoni@Ruutu1331 @CSKFansArmy @CSKFansOfficial @ChennaiIPL pic.twitter.com/qZMZwZkZFe
— Call Me S (@callmepsy_) July 15, 2023