தோனியிடம் உள்ள விதவிதமான பிரம்மாண்ட பைக்குகள்! வியந்து போன ஜாம்பவான் வெளியிட்ட வீடியோ

0
236

தன்னிடம் உள்ள பிரம்மாண்ட பைக்குகளை நிறுத்தி வைக்கவே ஒரு கட்டிடத்தை தோனி கட்டி வைத்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்பவர் மகேந்திர சிங் தோனி.

ஐசிசி நடத்தும் அனைத்து வகை தொடர்களையும் இந்திய அணிக்காக வென்ற தோனி, ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியை சிறப்பாக வழிநடத்துகிறார்.

தோனிக்கு கிரிக்கெட் மீதுள்ள அதே ஆர்வம் இரு சககர வாகனங்கள் மீதும் உள்ளது.தன்னிடம் உள்ள பிரம்மாண்ட பைக்குகளை நிறுத்தி வைக்க ஒரு தனி கட்டிடத்தையும் தோனி கட்டி வைத்துள்ளார்.

இந்த இடத்திற்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் வெங்கடேஷ் பிரசாத், அங்கு நிற்கும் பைக்குகள் மற்றும் கார்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here