இயக்குனர் விக்னேஷ் சிவன் விரைவில் தோனியை இயக்குவேன் என டிவிட்டரில் பகிர்ந்திருந்தது கவனத்தைப் பெற்றுள்ளது.இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன், இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த படத்தோடு ‘என்னுடைய முன்மாதிரியை நான் சந்தித்த போது எப்படி உணர்ந்தேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அவரை சந்தித்தது ஒரு நல்ல கதை. விரைவில் அவருக்கு ஆக்ஷன் சொல்லி இயக்கும் வாய்ப்பு வர உள்ளது. இந்த தருணம் வாழ்க்கை அழகானது என உணரவைத்தது. இதை நிகழ்த்திக் காட்டிய பிரபஞ்சத்துக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.