தோனி பிறந்தநாளுக்கு 52 அடியில் கட் அவுட் வைத்த ரசிகர்கள்

0
96

தோனி கொண்டாட்டத்தை தொடங்குவதற்கு முன்பாகவே ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி இன்று தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் 52 அடி நீளமான பதாகை (கட் அவுட்) வைக்கப்பட்டுள்ளது.

இந்த பதாகை ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.2007 டி20 உலகக்கோப்பை, 2011 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் கோப்பை என்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே தலைவர் மகேச்திர சிங் தோனி.

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக 5வது முறையாக கோப்பையை வென்று கொடுத்தார்.இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் கடந்த பிறகு கூட இன்றும் தோனியை இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தோனி மீதான அன்பு குறையவில்லை என்றே கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here