தோல்வியடையாத ஒரே ஒரு அணியாக பாகிஸ்தான் ! அதிரடி ஆட்டம்.

0
218

ஸ்கொட்லாந்துக்கு எதிராக அபு தாபியில் ஞாயிற்றுக்கிழமை (7) இரவு நடைபெற்ற குழு 2க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்தப் போட்டி முடிவுடன் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற 4 அணிகளில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணி என்ற பெருமையைப் பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது.

அணித் தலைவர் பாபர் அஸாம், ஷொயெப் மாலிக் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் பாகிஸ்தானின் வெற்றிக்கு அடிகோலின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 189 ஓட்டங்களைக் குவித்தது.

அணித் தலைவர் பாபர் அஸாம் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி 47 பந்துகளில் 66 ஓட்டங்களைக் குவித்தார்.

நடப்பு இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அஸாம் குவித்த 4ஆவது அரைச் சதம் இதுவாகும். அவர் இதுவரை 5 போட்டிகளில் மொத்தமாக 264 ஓட்டங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

ஷொயெப் மாலிக் 18 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 6 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றியுடன் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைக் குவித்தார்.

மொஹமத் ஹபீஸ் 19 பந்துகளில் 31 ஓட்டங்ளைப் பெற்றார்.

இது இவ்வாறிருக்க ஆரம்ப வீரர் மொஹம்மத் ரிஸ்வான் இன்றைய போட்டியில் 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்றபோதிலும் அனைத்துவகை இருபது 20 கிரிக்கெட் போட்டியில் ஒரே வருடத்தில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்தார்.

கிறிஸ் கேல் 2015இல் 36 இன்னிங்ஸ்களில் மொத்தமாக பெற்ற 1,665 ஓட்டங்கள் என்ற சாதனையை மொஹம்மத் ரிஸ்வான் இன்று தனது 5ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது முறியடித்தார். ரிஸ்வான் 38 இன்னிங்ஸ்களில் 1,676 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் பெற்ற 189 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்கபை; பெற்று 72 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ரிச்சி பெரிங்டன் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை அதிகப்பட்சமாகப் பெற்றார்.

பந்துவீச்சில் ஷதாப் கான் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here