தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
82

இலங்கையில் கடந்த சில வருடங்களாக தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தோலில் பயன்படுத்தப்படும் பல்வேறு அழகுசாதனப் பொருட்களும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் தங்கள் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்…. முதலில் செய்ய வேண்டியது, உங்களுக்கு ஏதேனும் தோல் நோய் இருந்தால், அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

தோலில் அரிப்பு, நிறம் மாற்றம், வெடிப்பு மற்றும் ஒவ்வாமை போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்.

சருமத்தின் நிறத்தில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டால் கிரீம் வகைளை பூசாமல் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சருமத்தில் ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும் என வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here