” த கெப்பிடல் மகாராஜ” குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரனின் மறைவானது எமது நாட்டுக்கே பேரிழப்பாகும்

0
202

” த கெப்பிடல் மகாராஜ” குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரனின் மறைவானது எமது நாட்டுக்கே பேரிழப்பாகும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” பிரபல வர்த்தகரும், ஊடக நிறுவனங்களின் பிரதானியுமான ‘கிளி மகாராஜா’ என்றழைக்கப்படும் ஆர். ராஜமகேந்திரனின் நாட்டுக்கும், சமூகத்துக்கும் வர்த்தகத்துறை மற்றும் ஊடகத்துறை வாயிலாக பல சேவைகளை ஆற்றியுள்ளார். நேர் கொண்ட பார்வையுடன் அவரின் வீறுநடை இறுதிகாலம்வரை தொடர்ந்தது.

அரசியல் களத்தில்கூட ஆதிக்கம் செலுத்தக்கூடிய அவரை ‘கிங்மேக்கர்’ என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுவதை மறந்தவிடமுடியாது. எதற்காகவும் அவர் அழுத்தங்களுக்கு அடிபணிந்ததில்லை. வர்த்தகராக இருந்தபோதிலும் ஊடக சுதந்திரத்தில் தலையிட்டது கிடையாது. புலி முத்திரை குத்தி அவரையும் ஓரங்கட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவற்றுக்கெல்லாம் வெற்றிகரமாக முகங்கொடுத்து முன்னோக்கி சென்றார்.

அவரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. அன்னாரின் பிரிவால் வாழும் குடும்பத்தார், கெபிடல் மகாராஜா குழுமத்தின் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா இளைப்பாற இறைவனையும் பிரார்த்திக்கின்றேன்.” – என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here