தமிழ்த்திரையுலகில் வெள்ளை ஐஸ்க்ரீம் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். ஒருகாலத்தில் இவரது பளிச்சென்னும் வெள்ளை தோற்றத்துக்கும், லுக்கிற்கும் தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
1996ல் காதல் தேசம் என்னும் திரைப்படம் மூலம் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆன அப்பாஸ், தொடர்ந்து அதிகமான ஹிட்ம் கொடுத்தார். சூப்பர் ஸ்டாரோடு சேர்ந்து படையப்பா படத்திலும் நடித்திருந்தார். ஆனந்தம், விண்ணுக்கும் மண்ணுக்கும், அழகிய தீயே என பல படங்களில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்த அப்பாஸ் தமிழ், மலையாளம், தெலுங்கி, இந்தி என இதுவரை 100 படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2011ல் இவர் பேஷன் டிசைனரான ஏராம் அலி என்பவரை கல்யாணம் செய்தார். இப்போது அப்பாஸ்_ஏராம் அலி தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரு குழந்தைகள் உள்ளனர். இப்போது விளம்பரப்படங்களில் மட்டுமே தலைகாட்டும் அப்பாஸ் சொந்த பிஸ்னஸில் முழுக்கவனமும் செலுத்தி வருவதாலேயே சினிமா சான்ஸ்களை மறுத்து வருகிறாராம்.
இப்போது தன் ரசிகர்களிடம் முதன்முறையாக வீடியோ மூலம் கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பேசினார் அப்பாஸ். அதில், ‘எனக்கு பிடித்த கதை அமைந்தால் நடிப்பேன். நானும் ஒரு குறிப்பிட வயதில் மன உலைச்சலால் தற்கொலை எண்ணங்களை எதிர்கொண்டேன். அந்த நிலையிலும் என் உயிரை விடாமல் நானே நல்ல நிலைக்குச் செல்ல வேண்டும் என என்னை மாற்றிக்கொண்டேன். என தான் கடந்து வந்த அந்தப் பாதை குறித்து நடிகர் அப்பாஸ் பகிர்ந்துள்ளார். இதோ அதை நீங்களே கேளுங்கள்.