நடிகர் அஜித்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள காவல்துறை தலைமையகத்துக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய மர்ம நபர் ஒருவர் இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.
எனினும் கொரோனா பரவல் காரணமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.