நடிகர் அஜித்தின் 61 ஆவது படத்தில் மீண்டும் சேரும் வெற்றி கூட்டணி.

0
213

சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத்.

இதையடுத்து  இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த ஹெச்.வினோத்திற்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு தேடி வந்தது.

அதன்படி அஜித்தை வைத்து இவர் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனால் தனது அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை அஜித் ஹெச்.வினோத்துக்கு கொடுத்தார். இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது அஜித்தின் ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், வலிமை படத்துக்கு பின் அஜித் நடிக்கும் 61 ஆவது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில், நடிகர் அஜித் இரண்டே மாதத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம். வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் அஜித்தின் புதிய பட பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here