நடிகர் மம்முட்டி வீட்டில் நடந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்..!

0
227

பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் என்பவர் இன்று காலமானதை அடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி என்பதும் இவர் தமிழ் உள்பட பல மொழிகளில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.

வயது முதிர் காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் மறைந்த பாத்திமா இஸ்மாயில் அவர்களின் இறுதி சடங்கு என்று மாலை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பாத்திமா இஸ்மாயில் மறைவை அடுத்து மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மானுக்கு நேரில் பல திரையுலக பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here