மதுரையில் உள்ள இல்லத்தில் ஜெகதீஷ்வரன் உயிரிழப்பு.நடிகர் வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரர் ஜெகதீஸ்வரன் தனது 55வது வயதில் காலமானார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவானாக இருப்பவர் வடிவேலு.இவருக்கு மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள்.இதில் ஒரு தம்பியான ஜெகதீஷ்வரன் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் காதல் அழிவதில்லை உட்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஜெகதீஷ்வரன் அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார்.இந்த நிலையில் மதுரையில் உள்ள இல்லத்தில் அவர் இன்று காலமானார்.
ஜெகதீஷ்வரனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.