சவீதா பொறியியல் கல்லூரியில் 3000 மரக்கன்றுகளை நேற்று செல்முருகன் நட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் விவேக்.
இவர் கடந்த 2021ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகர் விவேக்கின் அனைவரும் அறிந்த இன்னொரு பக்கம் மரம் வளர்ப்பு. எண்ணற்ற தனி மனிதர்கள், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகளோடு இணைந்து மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
தமிழ்நாட்டில் இவர் இப்படி வளர்த்த மரங்களின் எண்ணிக்கை 30 லட்சம் இருக்கும். கிரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழகமெங்கும் மரம் வளர்ப்பை முன்னெடுத்து வந்தார்.
இந்த நிலையில் விவேக்கின் நெருங்கிய நண்பரும், அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தவருமான செல் முருகன் விவேக் விட்டு சென்ற பணியை தொடர்ந்து வருகிறார்.
அதன்படி பல இடங்களில் மரக் கன்றுகளை நட்டு வருகிறார்.
அந்த வகையில், சவீதா பொறியியல் கல்லூரியில் 3000 மரக்கன்றுகளை நேற்று செல்முருகன் நட்டுள்ளார்.இது தொடர்பான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும், விவேக் உங்கள் உருவில் இன்னும் வாழ்கிறார், அவர் விட்டு சென்ற பணியை தொடர வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளனர்.
Today at saveetha engineering college . 3000 tree saplings event organised by #cisf pic.twitter.com/t235bPMaFe
— Cell Murugan (@cellmurugan) July 24, 2023