நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது!

0
58

சென்னையில், மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை வழக்கில், சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். துணை நடிகை வின்சி என்கிற நிவேதா உட்பட மேலும் 9 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்தனர்.

இவர்களிடமிருந்து 6 கிராம் மெத்தபெட்டமைன் கஞ்சா, போதைப்பொருள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுபோதை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் செய்தி சினிமா ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here