நடுரோட்டிற்கு வந்த கள்ளக்காதல்: நிர்வாணப்படுத்தி இளம் பெண் மீது கொடூர தாக்குதல்!

0
177

மத்திய பிரதேச மாநிலம், கஜாபுவாவைச் சேர்ந்த இளம் பெண் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. முகேஷூடன் நீண்ட நாட்களாக தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளார் அப்பெண்.

இந்நிலையில், முகேஷை விட்டு பிரிந்த அப்பெண் மீண்டும் தன் கணவரோடு சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார். தனிமையில் இருந்த முகேஷ் அப்பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அதற்கு அப்பெண் மறுத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, தனது கூட்டாளிகள் 5 பேரை அழைத்துக் கொண்டு முகேஷ், நேராக அப்பெண்ணின் கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது, அப்பெண்ணை முகேஷ் தன்னுடன் வாழ வரும்படி கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுக்கவே, 5 பேரும் சேர்ந்து அப்பெண்ணை தர தர என்று சாலைக்கு இழுத்து சென்று வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்ற முயற்சி செய்தனர்.

இதற்கு அப்பெண் மறுக்க, அந்தப் பெண்ணை நடுரோட்டில் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தி அடித்து சராமரியாக தாக்கினர். அப்பெண்ணின் கணவரும், அவரது உறவினரும் இத்தாக்குதலை தடுக்க, அவர்களையும் அக்கும்பல் கொடூரமாக தாக்கியது.

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கமெண்ட் செய்து வந்தனர்.

இந்த வீடியோ குறித்து அறிந்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here